பெண் கற்பழிப்பு-கஞ்சா வியாபாரி வாக்குமூலம்
ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் அருகே கடந்த 3ம் தேதி தனது காதலனுடன் வந்து கொண்டிருந்த விமான பணிப்பெண் பயிற்சி மாணவியை 3 பேர் சேர்ந்து கற்பழித்ததும், நான்காவது நபர் அந்த மாணவியின் உடல் முழுவதும் முத்தமிட்டதாகவும் பிடிபட்டுள்ள கஞ்சா வியாபாரி அந்தோணி என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில் அடுத்த திருப்பதிசாரம் அருகே கடந்த 3ம் தேதி தனது காதலனுடன் வந்து கொண்டிருந்த விமான பணிப்பெண் பயிற்சி மாணவி கற்பழிக்கப்பட்டார். அவரது காதலரை அடித்து விரட்டி விட்டு இந்த அக்கிரத்தை செய்தது 4 பேர் அடங்கிய கும்பல்.
இந்தக் கும்பலுடன் இருந்த அந்தோணி என்ற கஞ்சா வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் ..
நானும் கருங்கல் அருகேயுள்ள பாலூரை சேர்ந்த சதாசிவமும் நண்பர்கள். அவர் மூலம்தான் எனக்கு ராமனாதிச்சன்புதூரை சேர்ந்த மணிகண்டன், நல்லூரை சேர்ந்த பெரியசாமி, பாலூரை சேர்ந்த ஜான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று நாங்கள் 5 பேரும் இருமோட்டார் சைக்கிளில் திருப்பதிசாரம் வேளாண்மை ஆராய்ச்சி மையம் அருகே வந்து கொண்டிருந்தோம்.
அப்போது இருட்டு பகுதியில் இளம்பெண், வாலிபரின் சிரிப்பு சத்தம் கேட்டது. அநாதையாக மோட்டார் சைக்கிளும் நின்றது. இதையடுத்து அங்கு சென்றோம். அப்போது வாலிபரும், இளம்பெண்ணும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் யார், என்று விசாரித்தோம். நாங்கள் இருவரும் காதலர்கள், தனிமையில் சந்தித்து பேசுவதற்காக வந்தோம் என்று கூறினார்கள். அதற்குள் என்னுடன் வந்தவர்கள் வாலிபர் ரூபனிடம் இருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டனர். உயிருக்கு ஆசை இருந்தால் இங்கிருந்து ஓடிவிடு என்றோம். ரூபனும் அங்கிருந்து ஓடிவிட்டார்.
பிறகு கத்தியை காட்டி இளம் பெண்ணிடம் நகை உள்ளதா என்று பார்த்தோம். அவரிடம் பெரிதாக எதுவும் இல்லை. எனவே கத்தியை காட்டி மிரட்டி அருகில் உள்ள தோப்புக்கு இழுத்து சென்றனர். அங்கு சாதாசிவம், மணி, ஜான் ஆகியோர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தனர். இதில் இளம்பெண் மயக்கம் அடைந்தார்.
அதன்பிறகு பெரியசாமி சென்றார். மயக்க நிலையில் இருந்ததால் எதுவும் செய்ய வேண்டாம் என எச்சரித்தேன். இதனால் பெரியசாமி இளம்பெண்ணின் உடலில் பல இடங்களில் முத்தம் மட்டும் கொடுத்தார். பிறகு என்னிடம் ரூ.100 தந்து மயககம் தெளிந்தவுடன் எங்காவது விரட்டி விடுங்கள் என்றனர்.
நான் இளம்பெண்ணை எனது வீட்டிற்கு அழைத்து சென்றேன். எனது மனைவியிடம் இதுபற்றி கூறினேன். அவர் என்னை கண்டித்தனர். இதனால் பஸ் ஏற்றி விடுவதற்காக ஊருக்குள் அழைத்து வந்து கொண்டிருந்தேன். அப்போது போலீசார் தீவிரமாக தேடும் தகவல் கிடைத்தது.
இதனால் மீண்டும் வீட்டுக்குள் விட்டு விட்டு தப்பியோடி விட்டேன். ரயிலில் வெளியூர் செல்ல இருந்த என்னை போலீசார் சுற்றி வளைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தோப்பையும் அவர் அடையாளம் காட்டினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications