பிரபாகரன் இருந்திருந்தால் கேபியை பிடித்திருக்க முடியாது- கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், செல்வராசா பத்மநாதனை கைது செய்திருக்க முடியாது என கருணா கூறியுள்ளார்.
இலங்கை டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், அப்போது கேபி கைது செய்யப்பட்டிருந்தால், அடுத்த கனமே தனது செல்வாக்கை பயன்படுத்தி, பத்மநாதனை விடுதலை செய்திருப்பார் பிரபாகரன்.
பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், உலக நாடுகள் பத்மநாதனை கைது செய்ய இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்காது என்றார் கருணா.
கேபி கைதுடன் புலிகள் மீதான வெற்றி முழுமை அடைந்தது - கோத்தபயா
இதற்கிடையே, கேபியின் கைதுடன், விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. எல்டிடிஇ மீதான வெற்றி முழுமை பெற்றுள்ளது என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே கூறியுள்ளார்.
காலி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில்,
30 வருடங்களாக பயங்கரவாதத்தின் விளைவாக ஏற்பட்டிருந்த எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எமது அடுத்த தலைமுறைகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க வேண்டும்.
அதிபர், படைத் தளபதிகள் மற்றும் நான் என அனைவரும் சாதகமான வழிகளில் சிந்தித்ததாலேயே விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்றார் கோத்தபயா.












Click it and Unblock the Notifications