கலைஞர் காப்பீட்டு திட்டம்-4 மாத குழந்தைக்கு ஆபரேஷன்
சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் சிவகாசியை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை செய்து கொள்ள கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பொது மக்கள் 51 வகையான அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 1 லட்சம் வரை பெற்று கொள்ளலாம்.
இந்த திட்டம் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 4 மாத பெண் குழந்தைக்கு புது வாழ்வு கிடைக்க இருக்கிறது. அந்த குழந்தையின் பெயர் துர்காதேவி. குழந்தையின் தந்தை முத்துப்பாண்டியன் இரும்பு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு இதய கோளாறு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குழந்தையை மதுரையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறப்பட்டது. அங்கு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் ஆகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முத்துப்பாண்டியன் தனது குழந்தையை கேரளாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுவை சிகிச்சைக்கு 6 மாதத்துக்கு பின் தான் நாள் கிடைத்தது.
இதையடுத்து முத்துபாண்டியன், குழந்தையை கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் சேர்த்தார். அங்குள்ள டாக்டர்கள் ரூ. 1 லட்சத்தில அறுவை சிகிச்சை செய்து விடலாம் என கூறியுள்ளனர்.
அப்போது ரூ. 1 லட்சத்துக்கு எங்கே போவது என திகைத்த முத்துப்பாண்டியனுக்கு பத்திரிகைகளில் வெளிவந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கேள்விப்பட்டுள்ளார். உடனே அவர் அது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் தாமஸ் வைத்தியநாதனிடம் உதவுமாறு கேட்டு கொண்டார். அவரும் உதவுவதாக உறுதியளித்து உள்ளார்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications