வக்கீல்-போலீஸ் மோதல் வழக்கு - விலகுவதாக நீதிபதிகள் அறிவிப்பு

பிப்ரவரி 9ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் போலீஸார், வக்கீல்கள் மீது தடியடி நடத்திக் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிபதிகள் முகோபாத்யாயா, சந்துரு ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால் வழக்கு இழுபறியாக இருந்து வந்தது. சமீபத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், நீதிபதிகளை சந்தித்து, விரைவில் இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளும், அவர்கள் சார்பிலும் யாரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை, விலகிக் கொள்வதாகவும், வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் இரு நீதிபதிகளும் தெரிவித்தனர். இதை தலைமை நீதிபதிக்கும் அவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தொடருவது சிக்கலாகியுள்ளது. விரைவில் வேறு பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்படும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications