ராகிங்-அசாம் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
குவஹாத்தி: ராகிங் கொடுமைக்கு மீண்டும் ஒரு மாணவர் பலியாகியுள்ளார். அசாம் மாநில கல்லூரியில் படித்து வந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அசாம் மாநிலம், சோனாபூரில் உள்ள திமோரியா கலை கல்லூரியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக பிஏ முதலாம் ஆண்டு படிப்பில் சிந்துமோனி என்ற இளைஞர் சேர்ந்தார். சேர்ந்த முதல் நாளே சீனியர் மாணவர்கள் அவரை ராகிங் செய்துள்ளனர்.
ராகிங் காரணமாக மனவேதனை அடைந்த சிந்து மோனி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் கண்டு எடுக்கப்பட்டது.
இது குறித்து அந்த மாணவரின் சகோதரர் கோபிசந்த் பர்தோலி என்பவர் கூறுகையில், நேற்று வீட்டுக்கு போன் செய்து சிந்துமோனி என்னிடம் பேசினான். அப்போது கல்லூரியில் ராகிங் நடப்பதாகவும், விடுதியில் சீனியர் மாணவர்கள் மோசமாக ராகிங் செய்வதாகவும் அழுதபடியே கூறினான். அதிகாலை வரை தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தான்.
தற்போது அவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவன் சாவுக்கு ராகிங் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது என்றார்.
விடுதியில் இறந்த சிந்துமோனியுடன் தங்கியிருக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கூறுகையில், அருகில் இருக்கும் பகுதிக்கு சென்று புத்தகம் வாங்க போவதாக கூறிவி்ட்டு நேற்று காலை விடுதியில் இருந்து கிளம்பி போனார். அதன் பின்னர் திரும்பவில்லை என்றார்.
இது குறி்த்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications