வெளிநாடு போனவர்கள் வாங்கி வந்த பரிசுதான் ஸ்வைன்- ஆசாத் பேச்சு

அத்தோடு நில்லாமல், புனேவில் பன்றிக் காய்ச்சலால் இறந்த சிறுமி ரிதா ஷேக்கால்தான் பலருக்கும் பன்றிக் காய்ச்சல் பரவி விட்டதாகவும் அவர் பேசியுள்ளார். ஆசாத்தின் பேச்சுக்கு ரீதா குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த நோய்க்கு இந்தியாவில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த குலாம் நபி ஆசாத், பன்றிக் காய்ச்சலுக்குப் பலியான சிறுமி ரிதா 80 பேருக்கு மேல் இந்த காய்ச்சலை பரப்பிவிட்டார் எனக் கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஆசாத், தனது பேச்சுக்காக உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும், ராஜினாமா செய்ய வேண்டும் என சிறுமி ரிதாவின் குடும்பத்தார் வற்புறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஆசாத். இதுகுறித்து அவர் கூறுகையில்,
சிறுமி ரிதாதான் நோயை பரப்பிவிட்டார் என்ற நோக்கத்தில் கூறவில்லை. சிறுமி பலியானதற்கு அவர்களது குடும்பத்தாரை போல நானும் வருந்துகிறேன்.
அவர்கள் நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டார்கள். எனது பேச்சு அவர்களை வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன், மன்னி்ப்பு கேட்டு கொள்கிறேன்.
பன்றி காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. ஆனாலும் பன்றி காய்ச்சல் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த காய்ச்சல் பரவும் வேகத்தை கண்டு மக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
நாட்டில் இதுவரை 864 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் போவோர்தான் இந்த காய்ச்சலை இங்கு கொண்டு வந்து விட்டனர். அவர்கள் கொண்டு வந்துள்ள பரிசுதான் இது.
இதைத் தடுக்க வெளிநாட்டுக்கு யாரும் போகாமல் இருப்பதுதான். வெளிநாடுகளுக்கு செல்வதை சிறிது காலத்துக்கு நிறுத்தி கொள்ள வேண்டும். ஆனால், மக்கள் இந்த ஆலோசனைகளை ஏற்றுகொள்ளாமல், வெளிநாடுகளுக்கு சென்று, வந்து நமக்கு இந்த பரிசை கொடுக்கிறார்கள்.
பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தயவு செய்து மருத்துவமனைக்கு செல்லுமாறும், அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications