தலித் விடுதலை இயக்கம் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் தடை
கரூர்: கரூர் அருகே தலித் விடுதலை இயக்கத்தினரின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
கரூர் அருகே உள்ள வேலாயும்பாளையம், அண்ணா நகரில் பாலமுருகன் கூட்டுறவு நெசவு நூற்பாலை சொசைட்டி செயல்பட்டு வந்தது.
இந்த நசவு நூற்பாலை சொசைட்டி இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் கடன் பெற்றிருந்தது. உரிய காலத்தில் அசல் தொகையும், வட்டியையும் செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் வங்கி நிர்வாகம் இந்த சொசைட்டியை நீதிமன்றம் மூலம் ஏலத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்த இடத்தை தனியார் ஒருவர் ஏலத்தில் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த கூட்டுறவு சொசைட்டி உண்மையாகவே ஏலம் விடப்பட்டதா என்பதில் சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் தலித் விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சொசைட்டிக்கு அருகில் இருந்த துரைசாமி என்பவரது வீட்டையும் நீதிமன்ற உத்தரவை காட்டி இடித்துவிட்டதாகவும், மேலும் பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து தடுப்பு சுவர் எழுப்பி விட்டதாகவும் தலித் விடுதலை இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அந்த இடத்தை வழக்கம் போல் பொது மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், தவறு செய்த அதிதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியும் தலித் விடுதலை இயக்க மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தலைமையில், வேலாயுதம்பாளையத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக அறிவித்தனர்.
ஆனால், இந்த போராட்டம் நீதிமன்றத்தை அவமதிப்பு போன்றது என கூறி போலீசார் அதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications