திருச்சி கோர்ட்டில் எஸ்.ஏ ராஜா சரண் - நாளை பாளை சிறையில் அடைப்பு
திருச்சி: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வி்திக்கப்பட்ட எஸ்.ஏ ராஜா இன்று திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.
அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக நெல்லை போலீஸார் திருச்சி வந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர்நீதி மன்ற கிளை தீர்ப்பு வழங்கியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகரின் தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எஸ்ஏ ராஜா, ஆறுமுகம், வேல்துரை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே கடநத 8ம் தேதி இலங்கை செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலையத்தில் வைத்து எஸ்ஐ ராஜாவை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இருப்பினும் நீதிமன்ற வாரண்ட் கிடைக்காத காரணத்தால் அவரை போலீசார் உடனடியாக கைது செய்ய முடியவில்லை. இதையடு்தது அவர்கள் எஸ்ஏ ராஜாவை திருச்சி அடுத்த மணிகண்டபுரத்தில் உள்ள அவருக்கு சொந்தமான பல் மருத்துவ கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தங்க வைத்தனர்.
இந் நிலையில் இன்று எஸ்.ஏ ராஜா திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரை பாளையங்கோட்டை சிறையில் நாளை போலீஸார் அடைக்கவுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications