என்ஜினில் கோளாறு - நடு வழியில் நின்ற திருச்செந்தூர் ஸ்பெஷல் ரயில்
விருதுநகர்: திருச்செந்தூரிலிருந்து சென்னை கிளம்பிய வாராந்திர சிறப்பு ரயில், என்ஜின் கோளாறு காரணமாக நடு வழியில் நின்றதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்செந்தூரில் நேற்று மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டது.
விருதுநகருக்கு இந்த ரயில் மாலை 4 மணிக்கு வந்து சேர வேண்டும். ஆனால் ரயில் விருதுநகரில் 3-வது ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலேயே ரயில் நின்றது.
உடனடியாக ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் துலுக்கப்பட்டியில் இருந்து மாற்று என்ஜினுக்கு ஏற்பாடு செய்தனர். அங்கிருந்து மாற்று என்ஜின் வந்து பின்புறத்தில் இருந்து திருச்செந்தூர் - சென்னை ரயிலை தள்ளி விருதுநகர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது.
பின்னர் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
ரயில்வே லெவல் கிராசிங் அருகே வரும்போது நின்று விட்டதால் ரயிலின் வருகைக்காக அடுத்தடுத்து உள்ள 3 லெவல் கிராசிங்கிலும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரெயில், லெவல் கிராசிங்கை கடந்து செல்லாததால், எலக்ட்ரானிக் லாக்கர் முறை பயன்படுத்தப்படுவதால் இந்த 3 ரயில்வே கேட்டுகளையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ரெயில் விருதுநகர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபின்பு தான் அந்த 3 ரெயில்வே கேட்டுகளும் திறக்கப்பட்டன. இதனால் விருதுநகரில் 3 முக்கிய பாதைகளிலும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications