2 குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற எஸ்ஐ மனைவி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் கூட்டுறவு காலனி பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர் தேனி மாவட்டத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவி பிலோமினா (36). இவர்களுக்கு துர்கா (17) என்ற மகளும், சூர்யா (6) என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த பிலோமினா, தென்னை மரங்களுக்கு வைக்கும் மாத்திரைகளை குளிர் பானத்தில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அதை அவரும் குடித்தார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்து வீட்டினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்கள் மூவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி துர்கா இறந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூர்யா இறந்தார்.
பிலோமினா மட்டும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது கொலை மற்றும் தற்கொலை வழக்குகள் பதிவு செய்தனர். தற்போது உடல்நிலை தேறிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications