பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட ஜவுளிப் பூங்கா விருதுநகரில் அமைகிறது
சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட ஜவுளிப் பூங்கா, விருதுநகரில் அமையவுள்ளதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன், இந்த கைத்தறிப் பூங்காவுக்காக மத்திய அரசு ரூ. 70 கோடி நிதியைத் தரும். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இதேபோல மேற்கு வங்க மாநிலத்திலும் ஒரு கைத்தறிப் பூங்கா அமையவுள்ளது. இதற்கான இடத்தை மேற்கு வங்க மாநில அரசு இன்னும் தெரிவிக்கவில்லை என்றார் தயாநிதி மாறன்.
நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் ஐந்து ஒருங்கிணைந்த கைத்தறிப் பூங்காக்கள் அமையவுள்ளன. அதில் ஒன்றாக, பிரமாண்ட ஒன்றாக விருதுநகர் பூங்கா அமையும். இந்த பூங்காக்கள் மொத்தம் ரூ. 475 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.
விருதுநகரைத் தேர்ந்தெடுக்கக் காரணம், மதுரை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். எனவேதான் விருதுநகர் தேர்வு செய்யப்பட்டது.
இதுதவிர சென்னையில் உள்ள தேசிய பேஷன் டெக்னாலஜி கழகத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கான நவீனப் பயிற்சி வகுப்பை மேற்கொள்ள மாநில அரசு ரூ. 25 கோடி நிதியை ஒதுக்கியு்ளது என்றார் ஸ்டாலின்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications