மோசமாகும் வறட்சி நிலை - பிரதமர் அவசர ஆலோசனை
டெல்லி: நாட்டில் வறட்சி நிலை மேலும் மேலும் மோசமாகி வரும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், 13வது நிதிக் கமிஷன்த லைவர் விஜய் கெல்கர் மற்றும் திட்டக் கமிஷன் செயலாளர் சுதா பிள்ளை ஆகியோருடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
வறட்சியின் பாதிப்பு, இது பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு உள்ளிட்டவை குறித்து அவர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
பருவ மழை தவறியதால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களுமே வறட்சி நிலையை சந்தித்து வருகின்றன. இதனால் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே சனிக்கிழமை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வறட்சி நிலையை சமாளிக்க மாநில அரசுகள், தேசிய பேரிடர் நிதியிலிருந்து தேவையான அளவுக்கு நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளாம் என்று அறிவுறுத்தினார்.
இந்தியாவில் தற்போது மொத்தம் உள்ள 600 மாவட்டங்களில் 141 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி குறையாது - பிரணாப்
இதற்கிடையே, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் 161 மாவட்டங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஜிடிபியை எட்டுவது சாத்தியம் என்று அரசு உறுதியாக நம்புகிறது. வறட்சியால் வளர்ச்சி குறையாது என்றும் அரசு நம்புகிறது என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications