ஸ்வைன்: மதுரை, கோவை, நெல்லையில் சோதனை மையம் அமைக்க கருணாநிதி உத்தரவு
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் புதிதாக 3 சோதனை மையங்களை ஏற்படுத்த அவர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பன்றிக் காய்ச்சல் தமிழகத்திலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு சிறுவன் உயிரிழந்தான்.
இதையடுத்து இதுதொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் கருணாநிதி தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.
இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களிலும் நோய் கண்டறியும் சோதனை மையங்களை ஏற்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.
மக்களிடையே நோய் குறித்த பீதியைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளுமாறும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மக்கள் பன்றிக் காய்ச்சல் குறித்து பீதி அடைய வேண்டாம் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதுகுறித்து சுகாதாரத் துறைக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் ஆகியோர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
உயிரிழப்பைத் தடுக்க அனைத்துத் தரப்பினரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தின்போது முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications