நீதிபதிக்கு வீட்டுகாவல்-முஷாரப் மீது எப்ஐஆர்
இஸ்லாமாபாத்: அவசர நிலை காலத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியை வீட்டு காவலில் வைத்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வெஸ் முஷாரப் மீது அந்நாட்டு போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
கடந்த நவம்பர் 2007ல் நடந்த மறுதேர்தலில் முஷாரப் வெற்றி செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்த நிலையில் அதிபர் முஷாரப் அவசரநிலை பிரகடனம் செய்தார்.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் முகமது செளத்ரி உள்ளிட்ட 80 நீதிபதிகளை பதவி நீக்கம் செய்துவிட்டு, அவர்களை வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பாக முஷாரபை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று முகமது அஸ்லாம் கூமேன் என்ற வக்கீல் இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை முஷாரப் வீட்டுகாவலில் வைத்தது முறைகேடானது. முஷாரப் அரசு நீதிபதிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. அவர்களின் குழந்தைகள் சிலரால் தேர்வு எழுத முடியாமல் போனது என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நேற்று முஷாரபுக்கு எதிராக எப்ஐஆர் பதிவுசெய்யும் படி போலீசுக்கு உத்தரவி்ட்டது. இதையடுத்து பிரிவு 344/34ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எண் 31 தேதி 10.08.2009 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தி நியூஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,
முஷாரப் கைது செய்யப்பட்டால் இது போன்ற காரணங்களுக்காக அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
தனது ஆட்சியின் போது நவாஸ் ஷெரீப் மற்றும் பெனசிர் புட்டோ ஆகியோரை நாடு திரும்பவிடாமல் செய்தார். எப்ஐஆர் போடபட்டுள்ளதால் தற்போது அவருக்கும் அதே போன்ற கதி ஏற்பட இருக்கிறது என செய்தி வெளியி்ட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications