ஸ்வைன் மருந்து 'டமிஃப்ளூ' குழந்தைகளுக்கு அபாயகரமானது!

சுவிட்சர்லாந்து நாட்டின் ரோச் என்ற நிறுவனம்தான் இந்த காய்ச்சல் மாத்திரையை தயாரிக்கிறது. இதன் மருத்துவப் பெயர் ஓசல்டமிவீர், விற்பனைப் பெயர் டமிஃப்ளூ என்பதாகும்.
இந்த மாத்திரை குழந்தைகளுக்கு அபாயகரமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாத்திரையைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு வாந்தி, ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுமாம். குறிப்பாக ஒன்று முதல் 12 வயது வரையிலான குழந்தைகளில் ஐந்து சதவீதம் பேருக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக ஆய்வு ஒன்றை நடத்தி இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தகைளுக்கு ஏற்படும் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்போது இது நிவாரணத்தைக் கொடுத்தாலும் கூட, ஆஸ்துமாவை அதிகரிக்கும் அபாயமும் இந்த மாத்திரையில் உள்ளதாம்.
டமிஃப்ளூ தவிர ரிலென்ஸா என்ற இன்னொரு காய்ச்சல் தடுப்பு மாத்திரையும் கூட அபாயகரமானதாக கூற்படுகிறது.
பன்றிக் காய்ச்சலுக்கு தற்போது உலகம் முழுவதும் டமிஃப்ளூ மாத்திரகைள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் அதன் பக்க விளைவுகள் குறித்து உலகம் முழுவதும் கடும் கருத்து பேதம் நிலவுகிறது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறுகையில், டமிஃப்ளூவால் பல்வேறு சிக்கல்களை குழந்தைகள் சந்திப்பதாக ஆய்வுகளும், மருத்துவர்களும் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலைக் கொண்டு வரக் கூடிய அபாயமும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜப்பானில், இந்த மாத்திரைகளை உட்கொண்ட நோயாளிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்ததாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.
இதனால்தான் இந்தியாவில் இந்த மாத்திரிகளை அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அரசும் கூட இதை தற்போது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த அனுமதித்துள்ளது. சில்லறை விற்பனைக்கும் தடை உள்ளது என்றார்.
இருப்பினும் விரைவில் சில்லறை விற்பனைக்கு டமிஃப்ளூவை திறந்து விட அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications