யாழ்ப்பாணம் மேயராக டக்ளஸ் கட்சியின் யோகேஸ்வரி தேர்வு
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாநகராட்சியின் புதிய மேயராக டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபியைச் சேர்ந்த யோகேஸ்வரி பற்குணராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த யாழ்ப்பாணம் மாநகராட்சி தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. வவுனியா நகராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் வெற்றி கிடைத்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயராக டக்ளஸின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யோகேஸ்வரி பற்குணராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை மேயராக அதே கட்சியின் துரைராஜா இளங்கோ எனப்படும் ரீகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யோகேஸ்வரி கல்வியார் ஆவார். 28 வருடங்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்களில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியையாக இருந்துள்ளார். அரசுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications