நாளை சர்வக்னர் சிலை திறப்பு- கோலாகல ஏற்பாடுகள்
சென்னை: கன்னடக் கவிஞர் சர்வக்னாவின் சிலை நாளை சென்னையில் திறக்கப்படுகிறது. இதையொட்டி திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்றன.
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை கடந்த 9ம் தேதியன்று கோலாகலமாக நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து கன்னடக் கவிஞர் சர்வக்னரின் சிலை அயனாவாரம் ஜீவா பூங்காவில் நாளை திறக்கப்படுகிறது. கன்னட பாலிகா என்ற சங்கம் இந்த சிலையை நிறுவியுள்ளது.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். கர்நாடக அமைச்சர்கள், கன்னட இலக்கியவாதிகள், கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என திரளாக இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
திறப்பு விழாவையொட்டி ஜீவா பூங்காவில் சிலை நிறுவப்பட்டு விட்டது. பூங்கா முழுவதும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவுக்கு பெரும் திரளானோர் வருவார்கள் என்பதால், திறப்பு விழா அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் திடலில் நடைபெறவுள்ளது. அங்கு பிரமாண்ட மேடை போடப்பட்டுள்ளது.
விழாவையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications