தவறுகளை சுட்டிகாட்டினால் திருத்தி கொள்வோம்-சிதம்பரம்
இளையான்குடி: மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம் என்று இளையான்குடி தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.
இளையான்குடி தொகுதிக்குட்பட்ட தாயமங்கம், திருவள்ளூர், கீழாயூர் காலனியில் திமுக வேட்பாளர் மதியரசனுக்கு வாக்கு கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பயத்தால் அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
மாநில அரசு ரூ. 7 ஆயிரம் கோடி, மத்திய அரசு ரூ. 65 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடந்தாண்டு பயிர் இன்சூரன்ஸ் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அதே போன்று, ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
திமுக அரசு கொண்டு வந்த திருமண உதவி திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறுத்தினார். ஆனால், தற்போது அந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், முன்பு வழங்கப்பட்ட தொகையை உயர்த்தி தற்போது அது ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 1 லட்ச வரை மருத்துவ சிகிச்சை பெறும் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தவறு செய்திருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications