விஜயசாந்திக்கு எதிராக தெலுங்கானா கட்சியில் போர்க்கொடி
ஹைதராபாத்: கட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் விஜயசாந்தியை நீக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகையுமான விஜயசாந்தி நாடாளுமன்ற தேர்தலில் மேதக் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வென்றார்.
ஆனால், சமீபகாலமாக அவருக்கும், கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் இடையில் அதிருப்தி நிலவுகிறது. இதை விஜயசாந்தி தான் கட்சியிலிருந்து புறக்கணிக்கப்படுவதாக வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் கடந்த மாதம் இறுதியில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் காங்கிரசில் சேரப்போவதாக கூறப்பட்டது. ஆனால், அதை விஜயசாந்தி மறுத்துவிட்டார். என்றாலும் அவர் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகியே இருந்து வருகிறார். கட்சி கூட்டங்கள் எதற்கும் செல்வதில்லை.
சமீபத்தில் நடந்த கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தையும் அவர் புறக்கணித்தார். இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் நரசிம்ம ரெட்டி கூறுகையில்,
விஜயசாந்தி கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் கட்சி தலைவர்களுடன் தேவையற்ற மோதல் போக்கை உருவாக்கி வருகிறார் என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
விஜயசாந்தி கட்சிக்கு துரோகம் செய்து வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். தெலுங்கானா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றதால் அவர் தானாக முன் வந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications