நெல்லையில் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்
நெல்லை: நெல்லையில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுள்ளது.
நாட்டிலே மகாராஷ்டிராவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புனே நகரின் தட்பவெட்ப நிலை இந்த காய்ச்சல் வேகமாக பரவ ஏற்றதாக இருப்பதால் அங்கு பலர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நெல்லையில் மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சிமுத்து என்ற வாலிபருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லையில் மேலும் இரண்டு சிறுவர்கள் தொடர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த பகுதிக்கு செல்பவர்கள் அனைவரும் முகமுடி அணிந்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்தும் நெல்லைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நோய் தமிழகத்தின் தென் பகுதியிலும் பரவுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகள் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications