ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!
அருசா (தான்சானியா): இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மருமகன் ஷியாம்லால் ராஜபக்சே இன்று தான்சானியாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அது இயற்கை மரணமா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்சேவின் மாமனாரும், இலங்கை சுதந்திர கட்சி நிறுவனருமான டான் ஆல்வின் ராஜபக்சேவின் பேரன் ஷியாம்லால் ராஜபக்சே. 42 வயதான ஷியாம்லால் தற்போது தான்சானியாவில் ரூவாண்ட இன படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சர்வதேச தீர்ப்பாணையம் ஒன்றில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
அவர் அருசா நகரில் தனது மனைவி பிரசாந்தியுடன் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று ஷியாம்லால் தனது வீட்டில் மூக்கில் ரத்த வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்பகுதி போலீஸ் கமாண்டர் பசிலியோ மாடேய் இதை மறுத்துள்ளார். அவர் கூறகையில், ஷியாம்லால் நேற்று இரவு விருந்தினர்களுடன் பேசி கொண்டிருந்த போது நன்றாக இருந்துள்ளார். அவரை கொள்ளையர்கள் தாக்கியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறோம் என்றார்.
தான்சானியாவில் இலங்கையின் தூதரகம் இல்லாததால் அருகில் இருக்கும் கென்யாவுக்கான இலங்கை தூதரிடம் இந்த விஷயத்தை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications