முதுமலை-யானை மிதித்து வெளிநாட்டு பெண் பலி
ஊட்டி: முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜி்ல் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் யானை மிதித்து பலியானார்.
வோக்காபுரம் என்ற இடத்தில் உள்ள வன விடுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயது பெண் தனது மகனுடன் தங்கியிருந்தார்.
இருவரும் விடுதியின் பின் புறம் உள்ள வனப் பகுதியில் நடந்து சென்றபோது ஒரு காட்டு யானை இருவரையும் தாக்கியது. இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயமடைந்த அவரது மகன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் அனுமதியி்ன்றி சரணாலப் பகுதிக்குள் நுழைந்ததால் இந்த சம்பவம் நடந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குட்டி யானை அட்டகாசம்:
இதற்கிடையே குன்னூர் அருகே உள்ள கிராமங்கள், எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
கடந்த மாதம் 7 காட்டு யானைகள் கும்பலாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதம் விளைவித்தன. அவற்றை பொதுமக்களும் வனத்துறையினரும் விரட்டினர். இதில் பெரிய யானைகள் காட்டுக்குள் சென்றுவிட்ட நிலையில் ஒரு குட்டி யானை மட்டும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.
நேற்று முன்தினம் இந்த யானை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் வன ஊழியர் ஒருவரை தாக்கியது. மேலும் இரவு நேரங்களில் வீடுகளின் கதவுகளையும் தாக்கி உடைத்து வந்தது.
இதையடுத்து மயக்க மருந்து செலுத்தப்பட்டு நேற்றிரவு இந்த யானை மடக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications