இது தான் ஜெ-விஜய்காந்தின் சுதந்திர தின 'வாழ்த்து'!

இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
முதல்வர் கருணாநிதி:
அண்டை மாநிலங்களுடன் தொடர்ந்து நல்லுறவு பேணப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு என்றும் செயல்பட்டு வரும் இந்த அரசு ஒரு முத்திரைச் சாதனையாக கர்நாடக மாநில அரசுடன் இணைந்து பெங்களூரில் அய்யன் திருவள்ளுவர் சிலையைத் திறந்தும், சென்னையில் கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞரின் சிலையை திறந்து வைத்தும் தேசிய அளவில் மாநிலங்களுக்கிடையே நல்லுறவு பேணப்படுவதற்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
இந்த இனிய வேளையில் கொண்டாடப்படும் சுதந்திரத் திருநாளில் சாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு இடம் கொடாமல் ஒன்றுபட்டு நின்று, சுதந்திரத்தின் பயன் முழுவதும் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட அனைவரும் உறுதியேற்று உழைப்போம் என்று கூறியுள்ளார்..
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா:
"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்'' என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் மலருவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும்,
தமக்கென வாழாமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும், இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்! பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய்காந்த்:
ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத நாள் சுதந்திர தினம். ஜனநாயகம் என்ற பெயரால் இன்று சமூக விரோதிகள் அரசியல் ஆக்கிரமித்துள்ளனர்.
ஆக்டோபஸ் போன்ற இந்த கொள்ளைக் கும்பலிடம் அனைத்துத் தரப்பினரும் சிக்கி அவதிப்படுகின்றனர். இவர்களிடமிருந்து ஜனநாயகத்தை மீட்க சுதந்திர நாளை பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications