தா.பாண்டியனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டிருப்பதாக அக் கட்சி கூறியுள்ளார்.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் எரிக்கப்பட்டது. அதில் உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று அதிகாலை தா.பாண்டியன் ரயில் நிலையம் புறப்பட்டுச் சென்று விட்ட நிலையில் அவரது வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் ஜன்னலில் எட்டிப் பார்த்திருக்கிறார்.
வீட்டில் இருந்தவர்கள் அந்த நபரைப் பார்த்து கூச்சலிட்ட பின் அவர் தப்பியோடிவிட்டார். கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் அவரது வீட்டின் முன் மர்ம நபர்கள் நடமாடியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து அவருக்கு இவ்வாறான அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கிறது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை.
தா.பாண்டியன் வீட்டில் நடந்துள்ள இந்த நிகழ்ச்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications