மட்டகளப்பில் 7 சென்னை சேலை வியாபாரிகள் கைது
மட்டக்களப்பு: மட்டக்களப்பில் அனுமதி பெறாமல் வியாபாரம் செய்ததாக சென்னையை சேர்ந்த 7 துணி வியாபாரிகளை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலையில் 69 கிமீ தூரத்தில் மட்டக்களப்பு உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை அரசு அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் சேலை மற்றும் துணிகள் வியாபாரம் செய்த 7 தமிழர்களை கைது செய்துள்ளது. சென்னையை சேர்ந்த இவர்கள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அவர்களிடம் முறையான விசா இல்லாமல் சுற்றுலா பயணிக்களுக்கான விசாவுடன் வியாபாரம் செய்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் கருப்பையா ராமசாமி, மாரியப்பன் கிருஷ்ணா, மாரியப்பன் சின்ன சுப்பையா, சின்னவேல் சுப்பையா, ராமு சுப்ரமணியம், ராஜகோபால் ஜீவானந்தம் மற்றும் சாந்தப்பன் முருகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிழக்கு பகுதிக்கான துணை ஐஜி எடிசன் குணதிலகே கூறுகையில்,
தமிழக வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுல்லா பயணிகளுக்கான விசா வைத்திருக்கும் அவர்கள் சுற்றுலா பயணிகளாக மட்டுமே தங்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications