அந்தமானில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்
போர்ட்பிளேர்: அந்தமானில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட 3வது நிலநடுக்கம் ஆகும்.
நேற்று நள்ளிரவு 1.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாகப் பதிவானதாக டெல்லியில் உள்ள மத்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவி்ல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்துபோய் தெருக்களில் ஓடினர். இதனால் காலை வரை அங்கு பெரும் பீதியும் பரபரப்பும நிலவியது.
இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது சஜகம் என்றும் அதுபோன்ற நிலநடுக்கம் தான் இது என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமையும் 5.5 புள்ளிகள் அளவுக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications