அடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்!
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பது போல அமையாவிட்டால் அடுத்த இரு மாதங்களுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்திய அரசு வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை ஓரளவு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
ஆனால் தங்களது முதன்மை வட்டி விகிதத்தை மட்டும் குறைக்காமல் பார்த்துக் கொண்டன.
இதனால் எல்லா வங்கிகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் உபரியாகத் தேங்கிக் கிடக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள அரசு வங்கிகளின் உபரித் தொகை ரூ. 1, 46, 470 கோடி ரூபாய்.
கடன் வழங்குவதில் வணிக வங்கிகள் காட்டும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால், கடன் வழங்கும் அளவு கணிசமாகக் குறைந்துவிட்டது.கடந்த ஆண்டை விட இப்போது கிட்டத்தட்ட இருமடங்கு தொகை உபரி நிதியாக உள்ளது.
இதனால் உடனடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து, கெடுபிடிகளைத் தளர்த்தி கடன் வழங்கலைத் துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் வரை இதே நிலை நீடித்தால் வங்கிகளின் கையிருப்பில் உள்ள ரொக்கம் கணிசமாக உயர்ந்துவிடும். எனவே பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறாமல் இப்போதுள்ளது போன்றே இருந்தால், நிச்சயம் வங்கிகளின் முதன்மை கடன் வழங்கல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications