சுதந்திர தினம்-காஷ்மீரில் செயலிழந்த மொபைல்கள்!
ஸ்ரீநகர்: சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக நேற்று காஷ்மீர் மாநிலத்தில் காலை 8 மணி முதல் மதியம் சுமார் 1 மணி வரை ஐந்து மணி நேரத்துக்கு மொபைல் போன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் தீட்டிய சதியை முறியடிக்க பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவினர் செல்போன்களை முடக்கினர்.
நேற்று காலை காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
விழா நடக்கும் பக்ஷி மைதானம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன.
தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யவும், சதித் திட்ட உத்தரவுகளை பிறப்பிக்கவும் மொபைல்களை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு நேற்று காலை சுமார் 8 மணிக்கு காஷ்மீரி்ல் மொபைல் போன் சேவைகள் அனைத்தும் செயலிழத்தச் செய்யப்பட்டன.
சுதந்திர தின விழா முடிந்த பின்னரே பகல் 1 மணிக்கு மேல் தான் மொபைல் போன்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்தன.












Click it and Unblock the Notifications