காங்கிரசில் இணைகிறார் விஜய்சாந்தி?
ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலத்தை வலியுறுத்தி தல்லி தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வந்த விஜயசாந்தி கடந்த மக்களவைத் தேர்தலின்போது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் தனது கட்சியை இணைத்தார்.
அந்த கட்சி சார்பில் மெடக் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். ஆனால், பின்னர் விஜயசாந்திக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரசில் இணையப் போவதாக செய்திகள் வந்தன.
இதற்கு தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதலில் தனது எம்பி பதவியை விஜய்சாந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக் கட்சித் தலைவர்கள் கோரினர்.
இந் நிலையில் நேற்று மீண்டும் முதல்வர் ராஜசேகர ரெட்டியை விஜய்சாந்தி சந்தித்தார். தனது தொகுதி மேம்பாட்டுக்காக கூடுதல் நிதி கோரவே அவரை சந்திதத்தாக விஜய்சாந்தி கூறினாலும் இதை நம்ப தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி தயாராக இல்லை.
காங்கிரசில் சேருவீர்ரளா என்று விஜயசாந்தியிடம் கேட்டதற்கு, நான் காங்கிரசில் சேர வேண்டும் என்று விதி இருந்தால் அது கூட நடக்கும்.
என்னை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. நானாகவே கட்சியை விட்டு விலக வேண்டும் என்று என்னை அவமானப்படுத்துகிறார்கள்.
கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடந்தாலும் எனக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கிறார்கள் என்றார்.
இந் நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி அலுவலகம் விஜயசாந்திக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வாஸ்து தோஷம் இருப்பதாக வாஸ்து நிபுணர்கள் பீதி கிளப்பி விட்டுள்ளனர்.
இந்த அறையில் வாஸ்து தோஷம் இருப்பதால் அந்த அறை பாருக்கு ஒதுக்கப்படுகிறதோ அவர்கள் கட்சியில் இருந்து விரைவில் வெளியேறி விடுவார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த அறையை வாஸ்து சாஸ்திரத்துடன் மாற்றியமைக்க அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாம்.













Click it and Unblock the Notifications