கரூர் அருகே வேன் மீது லாரி மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே வேன் மீது லாரி மோதியதில் இரண்டு வயது குழந்தை உள்பட 4 பேர் பலியாயினர்.
திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் (55) குடும்பத்தினர் 13 பேர் நேற்றிரவு சமயபுரம் கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர்.
நள்ளிரவு 1 மணியளவில் வேன் கரூர்-கோவை பைபாஸ் சாலை கோவிந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி, வேன் மீது மோதியது.
இதில் வேனில் இருந்த சேகரின் மருமகன் பிரசாத், மகள்கள் பாரதி, தேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றவர்கள் அனைவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், இதில் சிகிச்சை பலனின்றி பிரசாத்தின் 2 வயது குழந்தை ஷாலினி பலியானது.












Click it and Unblock the Notifications