2 அண்ணாமலை பல்கலை. மாணவர்களை கடத்தல்-பத்திரமாக மீட்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இரண்டு மாணவர்களை கடத்தி ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய பெங்களூர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சந்தீப்குமார் (23), அபிஷேக் (22) என்ற பிகார் மாநிலத்தை இரண்டு சகோதரர்கள் முதல் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களது நண்பர் ஒருவருக்கு விவசாய கல்லூரியில் சீட் வாங்கி தருமாறு தங்களது உறவினர் அரவிந்த் சிங் என்பவர் மூலம் பெங்களூரை சேர்ந்த செளரவ் மிஸ்ரா என்பவரை தொடர்பு கொண்டனர். இதற்காக அவருக்கு ரூ. 29,000 கொடுப்பதாக கூறியுள்ளனர்.
முதலில் ஒப்பு கொண்ட செளரவ் மிஸ்ரா. பின்னர் கூடுதல் தொகை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சந்தீப் குமார் மற்றும் அபிஷேக் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சிதம்பரம் வந்த செளரவ் மிஸ்ரா, தான் தங்கியிருக்கும் ஹோட்டல் பெயரை சொல்லி அங்கு வரும்படி சந்தீப் குமாரிடம் கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சந்தீப்குமாரை மிஸ்ராவும் அவருடன் இருந்த கும்பலும் காரில் பெங்களூருக்கு கடத்தி சென்றுவிட்டனர். மீண்டும் சிதம்பரம் வந்த அந்தக் கும்பல் அபிஷேக்கையும் கடத்திச் சென்றது.
பின்னர் அரவிந்த் சிங்கை போனில் தொடர்பு கொண்ட மிஸ்ரா, இரண்டு மாணவர்களும் உயிரோடு விடுவிக்க ரூ. 5 லட்சம் கொடுக்குமாறு மிரட்டினார்.
இந்நிலையில் சந்தீப் குமார், செளரவ் மிஸ்ரா கும்பலிடமிருந்து தப்பி சிதம்பரம் வந்தார். இதைத் தொடர்ந்து சந்தீபும், அரவிந்த் சிங்கும் சிதம்பரம் போலீசில் நடந்த விஷயங்களைக் கூறவே போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
போலீசாரின் ஆலோசனையின் பேரில் தப்பி வந்த சந்தீப் குமார், மிஸ்ராவுக்கு போன் செய்து சிதம்பரம் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு கூறினர். இதையடுத்து சிதம்பரம் வந்த மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் பிடிபட்டிரு்த அபிஷேக்கையும் பத்திரமாக மீட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications