வரிச் சலுகையால் ஈராக் போகாமல் இந்தியா வந்த வட கொரிய கப்பல்!

ஜூலை 31ம் தேதி அமைச்சர் பவார், தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை, சுங்க வரி விதிப்பு ஏதும் இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார். இதுதான் ஈராக் நோக்கிப் போய்க் கொண்டிருந்த வட கொரிய கப்பல், இந்தியா நோக்கி திரும்பக் காரணம்.
எப்படி..? வட கொரியாவைச் சேர்ந்த எம்.வி. மு சான் என்ற அந்த கப்பல், 16 ஆயிரத்து 500 டன் சர்க்கரையுடன் ஈராக் நோக்கி போய்க் கொண்டிருந்தது. தாய்யலாந்திலிருந்து கிளம்பி ஈராக்கில் உள்ள உம் குவாசர் என்ற இடத்திற்குப் போவதாக திட்டம்.
இந்த நிலையில்தான் பவாரின் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பைக் கேட்ட அந்தக் கப்பலை ஈராக்குக்கு அனுப்பிய நிறுவனத்தின் சென்னைப் பிரிவு தடாலடியாக நடவடிக்கையில் இறங்கி கப்பலை ஈராக் போக வேண்டாம், இந்தியாவுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சர்க்கரையை விற்கவே இந்தத் திட்டம்.
அதேசமயம், மத்திய அரசின் அறிவிப்பு முழுமையாக அமலுக்கு வந்த பின்னரே கப்பல் உள்ளே வர வேண்டும் என்பதற்காக ஆங்காங்கு நின்று நின்று (இந்திய கடற்படைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தெரியாமல்) போகுமாறு கப்பல் கேப்டனுக்கு உத்தரவு போனது.
இதனால்தான் இந்தக் கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் ஆங்காங்கு பதுங்கி வந்துள்ளது. ஜூலை 31ம் தேதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டாலும் கூட அரசு கெஜட்டில் வர ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஆகும் என்பதால்தான் கப்பலை மெதுவாக செலுத்துமாறு கேப்டனுக்கு உத்தரவு போயுள்ளது.
கப்பலை தாமதமாக செலுத்துவதால், ஒரு நாளைக்கு 7000 டாலர் வரை தருவதாகவும் கப்பலை வாடகைக்கு அமர்த்திய நிறுவநம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பலை அந்தமான் நிக்கோபார் அருகே கடல் பகுதியில் எங்காவது நிறுத்துமாறும் அது கூறியுள்ளது.
அப்படி அந்தமான் பகுதியில் கப்பல் நின்று கொண்டிருந்தபோதுதான் இந்திய கடற்படை இந்தக் கப்பலைப் பார்த்து சுற்றி வளைத்தது. ஆகஸ்ட் 3ம் தேதி கப்பல் அந்தமானுக்கு வந்துள்ளது. 5ம் தேதி வரை கப்பல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. ஆனால் நமது கடற்படைக்கோ அல்லது கடலோரக் காவல் படைக்கோ அதுகுறித்து சுத்தமாக தெரியவில்லை.
அந்த வழியாக சென்ற பயணிகள் படகில் சென்றவர்கள் தான் தனியாக ஒரு கப்பல் நிற்பதைப் பார்த்து கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். (நமது கடலோரப் பாதுகாப்பு அந்த அளவுக்கு உள்ளது.)
இதையடுத்து அங்கு விரைந்த கடலோரப் படையினர் விசாரணை நடத்தியபோது முதலில் கப்பலில் பழுது என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் உள்ள அனைவரையும் பின்னர் கைது செய்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்தது.
விரைவில் இந்தக் கப்பலில் உள்ள சர்க்கரை காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. அப்போது சென்னை துறைமுகத்திலிருந்து இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல் சரங்கும், மு சான் கப்பலுடன் காக்கி நாடா வரை செல்லும். அங்கு சர்க்கரை இறக்கி விடப்படுவதை கடற்படையினர் நேரடியாக கண்காணிப்பர்.
மேலும் கப்பலையும், அதில் உள்ள பொருட்களையும் முழுமையாக சோதனையிட உளவுத்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனராம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications