சிதம்பரம் கோவில் தீட்சிதர்களுக்கே சொந்தம்: சாமி
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு தலையிட முடியாது. காரணம், அந்தக் கோவில், தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள எழுத்துமூலமான வாதத்தில் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு கடந்த 1987ம் ஆண்டு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சுப்ரமணியம் சாமி தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் அவர் எழுத்துப் பூர்வமாக தனது வாதத்தைப் பதிவு செய்யலாம் என நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
அதன்படி சாமி சார்பில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
நடராஜரே தீட்சிதர்தான்...
அதில் சாமி கூறியிருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களில் ஒருவர். சிதம்பரம் நடராஜர் ஆலயம் பொது தீட்சிதர்களுக்கே சொந்தமானது.
மத நம்பிக்கைகள் தொடர்பாக அரசியல் சட்டம் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கியுள்ளது. அரசாணையின் மூலம் இந்த உரிமைகளை எடுத்துக் கொள்ள முடியாது.
சட்டத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது.
பொது தீட்சிதர்கள் சமூகத்துக்கு இந்தக் கோயில் சொந்தமானது. சிதம்பரம் நடராஜர் ஆலய விழாக்கள், சடங்குகள் மற்றும் சொத்துகள் நிர்வாகத்தில் பொது தீட்சிதர்கள் சமூகத்தினர் முழுமையான தன்னாட்சி பெற்றுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு முன் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதன் காரணமாக செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் தற்போதும் தொடர்கின்றன என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகளுக்காக தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரலாமே ஒழிய, அதன் காரணமாக கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்ள முடியாது.
எனவே, சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரி நியமனம் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தனது வாதத்தில் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications