காவிரி-தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறக்கவில்லை: கர்நாடகம்
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், அணைகள் நிரம்பிவிட்டதால் உபரியாக உள்ள நீர் தான் திறந்துவிடப்படுவதாகவும் கர்நாடகம் கூறியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கர்நாடகம் 20 டிஎம்சி தண்ணீர் தர வேண்டியுள்ளது. அம் மாநில அணைகள் நிரம்பியுள்ள நிலையிலும் நீரை கர்நாடகம் திறந்துவிடாமல் உள்ளது.
இந் நிலையில் கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த காவிரி மின் திட்டங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், முதலில் கர்நாடகம் உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்றனர்.
இதையடுத்து கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுவிட்டதாகவும், அதுவும் கூடுதல் நீரைத் திறந்துவிட்டுவிட்டதாகவும் கன்னட பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதை கர்நாடகம் மறுத்துள்ளது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சாரியா கூறுகையில், கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவை அடைந்துவிட்டது. இதனால் உபரி நீர் தான் தமிழகத்துக்குத் திறந்து விடப்படுகிறது.
தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை.
காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதோ, அந்த அளவு நீர் திறந்துவிடப்படும் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications