சேலத்தில் ஏற்பட்ட திடீர் சத்தத்தால் மக்கள் பீதி
சேலம்: சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நில அதிர்ச்சி ஏற்பட்டது போல பலத்த சப்தம் கேட்டதால் மக்கள் பூகம்பம் வந்து விட்டதோ என்று பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
சங்ககிரி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் மூன்றே கால் மணியளவில், திடீரென பலத்த சப்தம் கேட்டது. மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்டது போன்ற உணர்வையும் மக்கள் சந்தித்தனர். இந்த சத்தம் மற்றும் அதிர்வு சித்தர்கோவில் வரை உணரப்பட்டது.
சங்ககிரி பூவானூர், கன்னந்தேரி பகுதிகளில் இந்த சத்தம் கேட்டதையடுத்து வீடுகள் மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்கள் சில வினாடிகள் அதிர்ந்தன. ஆஸ்பெஸ்டாஸ் மூலம் அமைக்கப்பட்டிருந்த சில வீடுகளின் கூரைகளும் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து, வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர். வானில் விமானம் சென்றதால் ஏற்பட்ட சத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதினர்.
பூலாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் பயங்கர சத்தம் கேட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். மேச்சேரியிலும் பிற்பகல் வெடி வெடித்ததுபோல பயங்கர சத்தம் கேட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை இதுபோன்ற சத்தம் ஏற்பட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
சத்தம் கேட்டபோது வானத்தில் நீண்ட தூரத்திற்கு புகைமண்டலமாக காட்சியளித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியிலும் பயங்கர சத்தம் கேட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, நிலநடுக்கம், நிலஅதிர்வு போன்றவை பதிவாக கூடிய சீஸ்மோகிராபி என்ற கருவி இங்கு உள்ளது. எங்கு நிலநடுக்கம், நிலஅதிர்வு ஏற்பட்டாலும் இந்த கருவியில் பதிவாகிவிடும். ஆனால் இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இங்குள்ள கருவியில் எந்த ஒரு நிலஅதிர்வும் பதிவானதற்குரிய அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்தனர்.
இதேபோல மேட்டூரில் உள்ள வானிலை ஆராய்ச்சி மைய அலுவலக அதிகாரிகளும் நில அதிர்வு கருவியில் எதுவும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர்.
எதனால் இந்த சத்தம் ஏற்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications