ரூ.1.25 கோடி மோசடி-அமிர்தாசஞ்சன் கேஷியர் கைது
சென்னை: அமிர்தாஞ்சன் நிறுவனத்தின் ரூ. 1.25 கோடி பணத்தை சுருட்டியதாக அந்த நிறுவனத்தின் கேஷியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின், பொது மேலாளர் விஸ்வநாதன் காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், எங்களது நிறுவனத்தில் கேஷியராகப் பணியாற்றும் சுப்பிரமணியன் என்பவர் ரூ.1.25 கோடி மோசடி செய்து
விட்டதார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
சுப்பிரமணியன் இதே நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கம்பெனியில் இருந்து மருந்து சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில் இருந்து வரப்பட்ட காசோலைகளை திருப்பி அனுப்பி அதற்கு பதிலாக அந் நிறுவனங்களில் இருந்து ரொக்கமாக பெற்று, அந்த ரொக்கத்தை கம்பெனியின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.
இதன் மூலம் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது மனைவி பெயரில் நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் மூலம் மருந்து சப்ளை செய்து மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும், பல்வேறு இடங்களில் வாங்கி குவித்துள்ள சொத்துக்களுக்கான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications