5 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படு கேவலமாய் தோற்ற கம்யூ-பாஜக!

இரு இடதுசாரிக் கட்சிகளும் நான்கு தொகுதிகளிலும் சேர்த்தே 16,476 வாக்குகளைத் தான் பெற்றுள்ளன. பாஜக 4 தொகுதிகளிலும் சேர்த்து 13,275 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் இளையாங்குடி நீங்கலாக மற்ற நான்கு தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. பாஜக ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் கம்பம் தொகுதி பாஜக வேட்பாளர் கடைசி நேரத்தில் திமுகவுக்குப் போய் விட்டார்.
தொண்டாமுத்தூரில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பெருமாள் பெற்ற ஓட்டுக்கள் - 9,126.
கம்பம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ராஜப்பன் பெற்ற ஓட்டுக்கள் - 2,303.
பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் எஸ். கண்ணு பெற்ற ஓட்டுக்கள் - 1,640.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் தனலட்சுமி பெற்ற ஓட்டுக்கள் - 3,407.
இந்த இரு கட்சிகளும் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கையே 16,476 தான்
இது தான் பாஜக நிலை..
பாஜகவைப் பொறுத்தவரை இளையாங்குடியில் 1,487, தொண்டாமுத்தூரில் 9,045, பர்கூரில் 1,482, கம்பத்தில் 946, ஸ்ரீவைகுண்டத்தில் 1,797 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்தக் கட்சி 4 தொகுதிகளிலும் சேர்த்து 13,275 வாக்குகளைத் தான் பெற்றுள்ளது.
இதன்மூலம் இந்த மூன்று தேசியக் கட்சிகளுக்கும் சொந்தமாக டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் 'செல்வாக்கு' இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இதனால் இடதுசாரி கட்சிகளும் பாஜகவும் தனித்துப் போட்டியிட்டால் தேறவே முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியுடன் 'புட்போர்ட்' பயணத்தைத்தான் மேற்கொண்டாக வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சிகள் மீண்டும் தள்ளப்பட்டுள்ளன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications