ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ.!
செங்கல்பட்டு: ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட வருவாய் கோட்ட அதிகாரியின் (ஆர்.டி.ஓ) வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி, அங்கிருந்து லஞ்சமாக பெறப்பட்ட வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
திருத்தணியில் ஆர்.டி.ஓ.வாக இருப்பவர் சந்திரசேகர். இப்பகுதியில் சங்கர் என்பவர் அனுமதி இல்லாமல் கல் குவாரி நடத்தி வருகிறார். இங்கு ரெய்டு நடத்திய சந்திரசேகர், குவாரியை மூடாமல் இருக்க வேண்டுமானால் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து சங்கரும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் வாஷிங் மெஷின் சிறிதாக இருந்ததால் பெரிசாக வேண்டும் என்று கேட்டுள்ளார் சந்திரசேகர். இதையடுத்து பத்தாயிரம் பணம் தருகிறேன். நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் சங்கர்.
இந்தப் பணத்தை தனது உறவினரான பாபு என்பவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் பாபு, லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸாரின் ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சந்திரசேகரின் வீட்டுக்குச் சென்ற பாபு அங்கு வைத்துப் பணத்தைக் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த போலீஸார் அவரை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் செங்கல்பட்டில் உள்ள சந்திரசேகரின் வீட்டிலும் போலீஸார் ரெய்டு நடத்தினர்.
பெரிய வாஷிங் மெஷினாக கேட்டு சிக்கிய சந்திரேசகரால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications