நாடு முழுவதும் ரம்ஜான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil

இன்று அதிகாலையிலேயே எழுந்து ரம்ஜான் மாதத்தின் முதல் நாளை நோன்புடன் தொடங்கினர் இஸ்லாமியர்கள். பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
தமிழகத்திலும் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ரமலான் பிறை நேற்று முன்தினம் தெரியவில்லை. இருப்பினும் கேரளா உள்பட பல பகுதிகளில் நேற்று முதலே இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.
இந் நிலையில் தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டது. இதையடுத்து இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜியார் முகம்மத் சலாஹூதீன் அயூப் அறிவித்தார்.
ரமலான் நோன்பு துபாய், உள்ளிட்ட வளைகுடா பகுதிகளில் நேற்றே தொடங்கி விட்டது.












Click it and Unblock the Notifications