கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் மோதி 5 மீனவர்கள் காயம்
சென்னை: சென்னை அருகே மீனவர்கள் வந்த படகு மீது இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பல் மோதியதில் ஐந்து மீனவர்கள் காயமடைந்தனர்.
சென்னை அருகே காசிமேடு பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் நேற்று இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்த பக்கமாக வந்த இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் எதிர்பாராத விதமாக மீனவர்கள் மீது மோதியது.
இதில் மீனவர்களின் இரண்டு படகுகளும் உடைந்து கடல் நீரில் மூழ்கியது. படகில் இருந்த ஐந்து மீனவர்களும் கடலுக்குள் குதித்து உயிர்தப்பினர். கப்பல் மோதியதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
கடலில் தத்தளித்து கொண்டிருந்த அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களது பெயர்கள் மோகன்(40), அருணாசலம்(40), தேவதாஸ்(34), நரேஷ்(23), பழவேற்காட்டை சேர்ந்த ரத்தின வேல்(40) என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications