தமிழர் இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும்-சீமான்
தூத்துக்குடி: ஈழத்தில் தமிழர்கள் சொந்த நாட்டில் கைதிகளாக வாழ்கிறார்கள். அடுத்த ஆண்டு மே 17ம் தேதி முதல் தமிழர் இயக்கம், அரசியில் இயக்கமாக மாறும் என சினிமா இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு கடந்த பல மாதங்களாக அங்குள்ள சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கின்றனர்.
இந்த கொடுஞ்செயலை எந்த நாடும் தட்டிக் கேட்கவில்லை என்றால் மீண்டும் மக்கள் போராட்டம் நடக்கும் என அமெரிக்கா இலங்கையை எச்சரித்துள்ளது. அமெரிக்கா குரல் கொடுக்கிறது. ஆனால் அருகில் உள்ள இந்தியா என்ன செய்கிறது.
முதலில் கன்னிவெடிகளை அகற்றப்பட்ட பிறகு தமிழர்களை விடுதலை செய்கிறோம் என மககள் மீது அதிக அக்கறையுள்ளது போல இலங்கை அரசு சொன்னது. ஆனால் இதுவரை விடுவிக்கவில்லை.
இலங்கை மக்களுக்கு இலவச நிலம் கொடுத்து வீடுகள் கட்டி கொடுக்கும் அரசு, தமிழர்களை அடிமாடுகள் போல் ஒரு முள்வேலி சிறைக்குள் அடைத்துள்ளது. சிறைகளில் உள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் எதுவும் கிடைப்பதில்லை. அவர்களது வாழ்வுக்கு பாதுகாப்பு இல்லை.
24 ஆயிரம் பேருக்கு அம்மை...
அவர்கள் சொந்த நாட்டில் கைதிகளாக, அகதிகளாக வாழும் நிலை உள்ளது. அங்கு அடைபட்டுள்ள 24 ஆயிரம் பேருக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. 6 ஆயிரம் பேருக்கு ம்ஞ்சள் கமாலை நோய் தாக்கியுள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இதில் சர்வதேச நாடுகள், மனிதநேயம் மிக்க தலைவர்கள் தலையிட்டு தமிழ் மக்களுக்கு விடுதலைக்கு வித்திட வேண்டும். இதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் 29ம் தேதி மாலை பேரணி நடக்கிறது. எங்களது குரல் இறையாண்மைக்கு எதிரானது அல்ல.
அடுத்த ஆண்டு மே 17ம்தேதி முதல் நமது தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது. இதனை சென்னையில் மாநாடு நடத்தி அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications