ஆந்திரா லாட்ஜில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் கொலை?
ஹைதராபாத்: ஆந்திராவின் செக்ந்திராபாத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு மர்மமாக மரணமடைந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துபாயில் இருக்கம் பெட்ரோலியம் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் காசிநாகலட்சுமி பராசாத் (45). சமீபத்தில் இந்தியா வந்த அவர் தனது மனைவி விஜயலட்சுமி (40), மகள்கள் கேத்தனா (15), கவிதா (10) ஆகியோருடன் கடந்த 19ம் தேதி செகந்திராபாத் வந்தார்.
அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களோடு மேலும் 2 ஆண்களும், 2 பெண்களும் தங்கியதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் மூன்று போரும் லாட்ஜ் அறையில் மர்மமாக இறந்து கிடந்தனர். ஆனால், அவர்களுடன் தங்கியிருந்த மற்ற நான்கு பேரையும் காணவில்லை.
இதையடுத்து லாட்ஜ் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற சந்தேகம் தற்போது அதிகரித்துள்ளது.
மேலும், பிரசாத்தின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடம் இருப்பதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுடன் தங்கியிருந்த அந்த நான்கு பேரும் யார், எதற்காக அவர்கள் பிரசாத் குடும்பத்தினருடன் வந்தார்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications