குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ஆசிரமம் அமைத்து, கருப்பசாமி தன் மீது வந்து அருள் வாக்கு கூறுவதாக கூறிக் கொண்டு சுதா என்பவர் குறி சொல்லி வந்தார். அவருக்குத் துணையாக தந்தை துரையும் இருந்தார்.
சுதா குறி சொல்லும் பாணியே தனி. சாதாரணமாக அவர் குறி சொல்ல மாட்டார். மது அருந்திக் கொண்டும், புகை பிடித்தபடியும்தான் அவர் குறி சொல்வது வழக்கம்.
குறி கேட்க வருபவர்கள் பூ, பழம் ஆகியவற்றுக்குப் பதில் குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என மது பாட்டில்களோடும், சுருட்டுப் பாக்கெட்டுகளுடனும்தான் வர வேண்டும்.
அவர்கள் தருகி மதுபானங்களை, அப்படியே ராவாக அடித்துக் கொண்டே குறி சொல்வார் சுதா.
இப்படியாக குறி சொல்லி பிழைப்பு நடத்தி வந்த சுதா மற்றும் அவரது தந்தை துரை ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு போலீஸார் பண மோசடி புகார் தொடர்பாக கைது செய்தனர். இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுதாவிடம் பணத்தைப் பறி கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே சுதாவின் ஆசிரமத்தை போலீஸார் இன்று பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆசிரமத்திற்குள் இருந்த மேசை, நாற்காலி, பூசைப் பொருட்களை சுதாவின் உதவியாளர்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications