'வீரப்பன் புகழ்' பிதாரியின் மகனை மணக்கும் மதுரை உதவி கலெக்டர்
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டை மூலம் பிரபலமான கர்நாடக காவல்துறை அதிகாரி சங்கர் பிதாரியின் மகனுக்கும், மதுரை உதவி கலெக்டர் ரோகினிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் உச்சத்தில் இருந்தபோது அவனைப் பிடிக்க அமைக்கப்பட்ட கர்நாடக அதிரடிப்படைத் தலைவராக இருந்தவர் சங்கர் பிதாரி. தேடுதல் வேட்டையின்மூலம் அவர் பிரபலமானார். தற்போது பெங்களூர் போலீஸ் கமிஷனராக உள்ளார்.
இவரது குடும்பத்தில் பிதாரியின் மனைவி உமா தேவி ஒரு டாக்டர். மற்றவர்கள் ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிதாரியின் மூத்த சகோதரி விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். மகாராஷ்டிர மகளிர் ஆணைய உறுப்பினர்-செயலாளராக இருந்து வருகிறார். அவரது கணவர் மல்லிகார்ஜூன பிரசன்னா ஐ.பி.எஸ். அதிகாரியாவார். மும்பையில் துணை கமிஷனராக இருக்கிறார்.
பிதாரியின் மகன் விஜயேந்திர பிதாரி. இவரும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த விஜயேந்திர பிதாரி, அங்குள்ள டோல்பூர் மாவட்ட எஸ்.பியாக இருக்கிறார்.
இவருக்கும், மதுரையில் உதவி கலெக்டராக இருக்கும் ரோகினி பாஜிபகாரே என்பவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரோகினிக்கு சொந்த மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
ஆகஸ்டு 30-ந் தேதி பெங்களூர் அரண்மனையில், விஜயேந்திர பிதாரி-ரோகினி பாஜிபகாரே திருமணம் நடக்கவுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications