கணவருடன் மோதல்-விவாகரத்து செய்கிறார் சாரா பாலின்

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி விட்டதால் சாரா பாலினும், அவரது கணவர் டோட்-டும் விவாகரத்து முடிவுக்கு வந்து விட்டனர்.
கணவருடன் கடும் சர்ச்சையில் ஈடுபட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளானதால்தான் தனது ஆளுநர் பதவியை கடந்த வாரம் சாரா பாலின் ராஜினாமா செய்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ராஜினாமா அறிவிப்பை சாரா வெளியிட்டபோது அவருடன் கணவர் டோட்டும் உடன் இருந்தார். இருப்பினும் இருவரும் சகஜமாக பேசிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடவில்லை. மேலும் ராஜினாமா முடிவை அறிவித்த பின்னர் டோட்டும், சாராவும் தனித் தனியாகவே கிளம்பிச் சென்றனர்.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பே தனது திருமண மோதிரத்தை சாரா பாலின் கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.
சாராவின் சொந்த ஊர் இடாஹோ ஆகும். ஆனால் சமீபத்தில் சாரா பாலின் மோன்டனாவில் இடம் வாங்கியுள்ளார். அங்கு தனது குடும்பத்துடன் இடம் பெயரப் போகிறாராம்.
சாராவின் கணவர் டோட், அலாஸ்காவில் உள்ள எண்ணைக் கிணறுகளில் முன்பு பணியாற்றி வந்தார். தற்போது தனது பழையை பணிக்கேத் திரும்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.
சாரா பாலின் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது அவரது விவாகரத்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
சாரா - டோட் மனக் கசப்புக்கு அவர்களது 17 வயது மகள் பிரிஸ்டலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பிரிஸ்டர் தனது காதலர் லெவியுடன் படு நெருக்கமாக இருந்ததை சாரா, தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். இதனால் பிரிஸ்டல் கர்ப்பமானார்.
இதையறிந்த டோட் சாரா மீது கோபம் கொண்டார். மேலும், சாராவின் 19 வயது மகனான டிராக், போலி அடையாள அட்டையைக் காட்டி மதுபானம் வாங்கினார். இதனால் சிறைக்குப் போகும் அபாயம் எழுந்தது. இதைத் தவிர்க்க ராணுவத்தில் சேருமாறு அவருக்கு அட்வைஸ் செய்தார் சாரா. இதனாலும் டோட் ஆத்திரமடைந்தார்.
இப்படி பிள்ளைகளை தவறான பாதையில் வழி நடத்தி வருவதாக மனைவி மீது கோபம் கொண்டார் டோட். இதை சாரா விரும்பவில்லை. இவையெல்லாம் சேர்ந்து தற்போது சாரா- டோட் விவாகரத்துக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications