ஜின்னா புத்தகம்-பாக். செல்லும் ஜஸ்வந்த் சிங்

ரம்ஜான் முடிந்த பின்னர் ஜஸ்வந்த்தின் பாகிஸ்தான் பயணம் அமையும் எனத் தெரிகிறது. அந்த பயணத்தின்போது ஜின்னா குறித்து தான் எழுதிய, தன்னை பாஜகவிலிருந்து நீக்குவதற்குக் காரணமாக அமைந்த சர்ச்சைக்கிடமான Jinnah: India, Partition, Independence நூலை பாகிஸ்தானில் வெளியிடுவார் ஜஸ்வந்த் சிங் எனத் தெரிகிறது.
இதுகுறித்து நூலின் பதிப்பாளரான ரூபா அன்ட் கம்பெனியின் தலைவர் ஆர்.கே.மெஹ்ரா கூறுகையில், இன்னும் சில நாட்களில் ஜின்னா நூலின் அறிமுகப் படலம் பாகிஸ்தானில் தொடங்கும். பாகிஸ்தானில் உள்ள எங்களது சக பதிப்பாளரைத் தொடர்பு கொண்டு, புத்தகத் தொடக்க விழாவுக்கு தேதி குறிக்குமாறு கேட்டுள்ளோம். ரம்ஜானுக்குப் பின்னர் நூல் வெளியீட்டு விழா நடைபெறும் என்றார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜஸ்வந்த் சிங் போவாரா என்ற கேள்விக்கு, ஜஸ்வந்த் சிங்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர். அவர் இல்லாமல் எப்படி தொடக்க விழா நடைபெறும்? என்றார் அவர்.
சமாஜ்வாடிக்கு அழைக்கும் அமர்சிங்:
இந் நிலையில் ஜஸ்வந்த் சிங், சமாஜ்வாடி கட்சியில் சேர வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமர்சிங் டிவி சேனல்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜஸ்வந்த் சிங்குடன் நான் பேசியுள்ளேன். நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று கூறினேன். சமாஜ்வாடிக்கு வாருங்கள் என்று ஜஸ்வந்த் சிங் போன்ற மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுவதற்கு நான் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை.
இருந்தாலும், சமாஜ்வாடி கட்சி என்ற தளத்திலிருந்து கொண்டு அவரது அரசியல் தொடர அழைப்பு விடுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நான் அழைப்பு விடுத்ததும், முதலில் உங்களது உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நலம் பெற்றுத் திரும்பியவுடன் அதுகுறித்துப் பேசலாம் என்றார் அமர் சிங்.
அமர்சிங், தற்போது சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறிச்சோடிய பாஜக ஆபிஸ்..
இந் நிலையில் கட்சியில் பெரும் கலாட்டா நடந்து வருவதால் கடந்த 3 நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு எந்த முக்கியத் தலைவரும் வரவில்லை. தொண்டர்களும் வரவில்லை. இதனால் அலுவலகமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications