காவலாளிகளை தாக்கி திருநீர்மலை கோயிலில் கொள்ளை முயற்சி
சென்னை: சென்னை அருகே இருக்கும் திருநீர் மலை கோயிலில் காவலாளிகளை தாக்கிவிட்டு மர்ம கும்பல் ஒன்று நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தது. அப்போது எச்சரிக்கை மணி அடித்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது திருநீர்மலை. இங்குள்ள ரங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த மலை கோயிலுக்கு முனுசாமி மற்றும் ரங்கநாதன் என்ற இரண்டு காவலாளிகள் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 1 மணிக்கு கோயிலுக்குள் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று புகுந்தது. இதை பார்த்த காவலாளிகள் அவர்களை தூரத்தியடிக்க முயன்றனர்.
ஆனால், அந்த கும்பல் இரண்டு காவலாளிகளையும் இரும்பு கட்டையால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த இரண்டு காவலாளிகளும் அதே இடத்தில் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து அந்த கும்பல் கோயிலின் உள்பகுதியில் நகைகள் இருக்கும் அறையின் கதவை உடைத்தது. பின்னர் உள்ளே இருந்த பீரோவையும் உடைக்க முயற்சித்தது. அப்போது பீரோவுடன் இணைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணி அபாய சத்தத்தை எழுப்பியது.
தாங்கள் மாட்டி கொள்ளும் அபாய உருவானதை அறிந்த அந்த மர்ம கும்பல் கோயிலில் இருந்து ஓட்டம் பிடித்தது. பின்னர் மலை பாதை வழியாக வேறு இடத்துக்கு தப்பி சென்றது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இணை கமிஷனர் வரதராஜூலு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிபட்ட காவலாளிகள் இருவரும் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி்ச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications