புதிய ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்தது
சென்னை: ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் முத்துக்குமாரசாமி வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தின் (2009) கீழ், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கீழ்கண்ட விதிகளை உருவாக்கி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டானது, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- இந்த போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளின் உரிமையாளர்கள், கால்நடை பராமரிப்புத் துறையினரிடம், போட்டி தொடங்கும் 3 மணி நேரத்துக்கு முன்னதாக, காளைகளை காண்பித்து அனுமதி பெறவேண்டும்.
- அந்த காளைகளை கால்நடை பராமரிப்பு துறையினர் பரிசோதனை செய்து, அதற்கு அதிக சக்தியையும், ஊக்கத்தையும் தரும் எந்தவிதமான மருந்துகளோ, பானங்களோ தரப்படவில்லை என்று சான்றளிக்க வேண்டும். காளைகளுக்கு, அதுபோன்ற மருந்துகளோ, பானங்களோ தரப்பட்டிருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கருதுவார்களேயானால், அந்த காளைகளை போட்டியில் பங்கேற்கவிடாமல் விதிக்கலாம். இந்த விஷயத்தில், கால்நடை பராமரிப்புத்துறையினர் எடுக்கும் முடிவே இறுதியானது.
- போட்டியை நடத்தும் அமைப்பாளர், ஆடுகளத்தில் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக விடப்படும் வகையில் ஏற்பாட்டை செய்ய வேண்டும். ஆட்டத்தில் ஒரு முறை பங்கேற்ற காளையை, மீண்டும் ஒரு முறை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது.
- போட்டியில் பங்கேற்போருக்கும், காளைகளுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் காயம் ஏற்படாமல் இருப்பதற்காக, போட்டி நடைபெறும் களமானது, எந்தவித மேடு, பள்ளமும் இன்றி சீராக அமைக்கப்பட்டுள்ளதா என்பதனை மாவட்ட கலெக்டர் உறுதி செய்துகொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications