வங்கியில் கொள்ளை முயற்சி-ரூ. 2.5 கோடி தப்பியது
நெல்லை: நெல்லை அருகே கூட்டுறவு வங்கி ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம கும்பல் ஒன்று லாக்கர் உடைக்க முடியாததால் முயற்சியை கைவிட்டு தப்பியோடியது. லாக்கரில் இருந்த ரூ. 2.5 கோடி தப்பியது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே இடையன்குடியில் குட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கி உள்ளது. இங்கு விவசாய கடன் உள்ளி்ட்ட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மேலாளராக இருக்கும் சுந்தர்சிங் என்பவர் நேற்று வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வங்கி திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு வங்கியின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வங்கி லாக்கரை பார்க்க விரைந்து சென்றார். அப்போது லாக்கர் பலத்த சேதமடைந்திருந்தது. ஆனால் திறக்கப்படவில்லை. இதையடுத்து ஏதோ ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயற்சித்திருக்கலாம் என்பதை உணர்ந்த மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த மர்ம கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
மர்ம கும்பல் ஒன்று கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. ஆனால், அவர்கள் நீண்டு முயற்சி செய்தம் லாக்கர் திறக்கவில்லை என்பதால் முயற்சியை கைவிட்டு ஒட்டம் பிடித்துள்ளனர். லாக்கரில் இருந்த ரூ. 2.5 கோடி, நகை ஆகியவை பத்திரமாக இருக்கின்றன என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications