சுபிக்ஷா சொத்துக்களை ஜப்தி செய் நீதிமன்றம் அனுமதி!
சென்னை: சுபிக்ஷா நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய கோடக் மகிந்திரா நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை உள்பட இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கிய சில்லறை விற்பனை மையமான சுபிக்ஷா, நிதி நெருக்கடி காரணமாக இழுத்து மூடப்பட்டன. 16,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்தனர்.
சுபிக்ஷாவுக்கு பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலும் ரூ. 800 கோடிக்கு மேல் கடன்கள் உள்ளன. இதுதவிர வாடகை பாக்கியாக மட்டுமே ரூ.32 கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. பங்குதாரர்களுக்கு ரூ. 85 கோடிக்கு மேல் கடன் தரவேண்டியுள்ளது.
கோடக் மகிந்திரா நிறுவனம் சுபிக்ஷா தனக்குத் தரவேண்டிய கடன் பாக்கிக்காக அந்நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய முனைந்தது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சுபிக்ஷா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கோடக் மகிந்திரா நிறுவனத்தின் ஜப்தி நடவடிக்கை தொடரலாம் என அறிவித்துள்ளது.
மேலும் சுபிக்க்ஷாவுக்கு எதிரான நோட்டிசை தேசிய நாளிதழ்களில் வெளியிடவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடாக் மகேந்திராவின் வங்கியின் நடவடிக்கையை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ அந்த நிறுவன பங்குதாரர்களுக்கு இந்நோட்டீஸ் மூலம் ஒருவாய்ப்பு தரப்படுகிறது. தனது பங்குதாரர்களுடனும் கடன் தாரர்களுடனும் சமரசம் செய்துகொள்ள சுபிக்க்ஷா குழுமம் கேட்டிருந்த அவகாசத்தை அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications